நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

1,000

“படப்பிடிப்புக்கு போன இடத்தில் பாண்டிச்சேரி முதல்வரை சந்தித்த சந்தானம் !”

மரியாதை நிமித்தமா ? அரசியல் ஏதுமா .?!

சந்தானம் கதாநாயகராக நடித்த
‘இனிமே இப்படித்தான் ‘பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் இயக்கத்தில்., சந்தானம் நடிக்கும் இன்னமும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு ., பாண்டிச்சேரி பகுதியில் சமீபமாக தொடங்கி தொடர்ந்து வருகிறது.

இதன் படப்பிடிப்பிற்காக நேற்று, 17-12-2021 அன்று, பாண்டி சென்ற சந்தானம் அண்ட் கோவினர் ., பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மலர்கொத்து மாலை மரியாதை செய்துவிட்டு அதன் பின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைராலாகி வருகிறது.

இப்படத்தை , சந்தானம் திக்கு வாய் கேரக்டரில் நாயகராக நடித்து சமீபமாக திரைக்கு வந்து வெற்றிவாகை சூடிய ‘சபாபதி’ படத்தயாரிப்பாளர் ரமேஷ்குமார் தனது ஆர்கே சினிமாஸ் பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

படப்பிடிப்புக்கு போன சந்தானம் படக்குழுவினர் பாண்டி முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சொல்லப்பட்டாலும் ., சமீபமாக சந்தானம் தனது , ரசிகர் நற்பணி மன்றத்தினர்., வாயிலாக மழை வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு பல இடங்களிலும் அரிசிமளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவியது ,போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு தனக்குள் கிளர்ந்தெழுந்திருக்கும் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வருவதை அறிந்தவர்கள் ., இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணம் அரசியலாகவும் இருக்கலாம்…. என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

இருக்காத பின்னே ., தன்னுடன் இணைந்து நடித்த ., இன்னும் சொல்லப்போனானால் தன் காமெடியை நம்பி தன்னை கூட்டு சேர்த்துக்கொண்டு நடித்து சினிமாவில் நாயகராக அறிமுகமான உதயநிதி தமிழக எம்எல்ஏ ஆகும்போது , சந்தானம் தன் சமூகம் பெருவாரியாக வசிக்கும் பாண்டி அரசியல் மீது ஒரு கண்ணும் அரசியல்வாதிகள் மீது அதீத பாசமும் கொள்வதில் தவறொன்றுமில்லையே.?!

😀😀😀😀😎😀😀😀😀