நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை !’
இது மாதிரி, வசனங்களின் வாயிலாக
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாராகும் ‘ரைட்டர்’!!
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது, ‘நீலம் ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய இயக்குனர் பா இரஞ்சித் தொடர்ந்து பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்
இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.
சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் காவல்நிலைய எழுத்தராக (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் சமுத்திரக்கனி.
காவல்நிலையங்களில் ரைட்டர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்த வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிகிறது.
‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல அனல் தெறிக்கும் வசனங்கள் தற்கால வாழ்வியலில் காவல்துறையில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் விதமாக ஒரு நல்ல திரைப் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.
பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிற ‘ரைட்டர்’., ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
“காவல்நிலையங்களில் ரைட்டர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்த வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பது …’ , ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு…’, ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை !’’ உள்ளிட்ட பல அனல் தெறிக்கும் வசனங்கள் ., எல்லாம் ஓ.கே. ஆனால், ‘ரைட்டர்’ காவல்நிலையங்களில் நிலைய எழுத்தர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தங்களை மட்டுமே பேசியுள்ளதா ? பா.ரஞ்சித் தயாரித்துள்ள படமென்பதால் , காவல் நிலையங்களில் காவலர்களுக்குள்ளேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பேசி இருக்கிறதா .?! என்பதும் ரைட்டரின் வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்! என ‘பொடி’ வைத்து கிசுகிசுக்கின்றனர் கோடம்பாக்கத்து கோல் சொல்லிகள் சிலர். இன்னும் சிலர்., அதையும் பேசியிருந்தாலும் அதில் தவறொன்றுமில்லை … என ரஞ்சித்துக்கு ஆதரவு குரலும் கொடுக்கின்றனர். எது, எப்படியோ … ‘கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் !’ அதுவரை,காத்திருப்போம் !!
😀😀😀😀😎😀😀😀😀