நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
” புதுப்பொலிவுடன் சென்னை தி.நகர் ‘ஜோயாலுக்காஸ் !”
-திறந்து வைத்த ‘மம்பட்டியான்’, திறமை சாலி நடிகர் பிரஷாந்தை வைத்து சிறந்த படமொன்றை ரசிகர்களுக்கு விருந்து வைப்பாரா விரைந்து .?!
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் கோல்ட் டவரில் 1 லட்சம் சதுர அடிக்கும் மேலான பரப்பளவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அமைந்துள்ள ஜோயாலுக்காஸ் , வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், முன்பை விட கூடுதல் வாகன நிறுத்தும் இடம், மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.
புதுப்பொலிவு பெற்றிருக்கும் உலக புகழ்பெற்ற ஜோயாலுக்காஸ் பிரமாண்ட நகை மாளிகையை நடிகரும் இயக்குநரும் பிரஷாந்த் கோல்ட் டவரின் உரிமையாளருமான தியாகராஜன் தனது ராசியான கரங்களால், முக்கிய ஜோயாலுக்காஸ் நிர்வாகிகள் , ஊழியர்கள் உடனிருக்க ., இரு தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தியாகராஜன்,
“ ஜோய்லாக்காஸ் உலகமுழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக உள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ், புத்தம் புது டிசைன்களில் தங்கம், வைரம் , பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளை மிகவும் திறமையான வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.வாடிக்கையாளர்களிடம் இங்கிருக்கும் விற்பனை பிரதிநிதிகளின் கனிவான உபசரிப்பு இந்த நிறுவனத்தின் தனி அடையாளமாக விளங்குகிறது.
கொரானா தடுப்பு காலங்களில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்படுகிறது..” என்று ரத்தின சுருக்கமாக பேசி ஜோயாலுக்காஸ் புதுப்பொலிவு பெற்றதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தினார்.
அனைத்து நகைகளுக்கும் V.A இல் 30% தள்ளுபடியை தங்கம், வைரம், precious வெள்ளி வாடிக்கையாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பொலிவு பெற்றுள்ள சென்னை தி.நகர் ஜோயாலுக்காஸ் வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
“பொங்கலை முன்னிட்டு சென்னை தி.நகர் ‘ஜோயாலுக்காஸ் “நகை கடையை புதுப்பொலிவுடன் திறந்து வைத்த ‘மம்பட்டியான்’ தியாகராஜன், “திறமை சாலி நடிகர் பிரஷாந்தை வைத்து சிறந்த படமொன்றை ரசிகர்களுக்கு விருந்து வைப்பாரா விரைந்து .?!” என நம் காதுபடவே விழாவிற்கு வந்திருந்த ஜோயாலுக்காஸ் வாடிக்கையாளர்களில் சிலர், தங்களுக்குள் பேசி சென்றது ‘மம்பட்டியானி’ன் காதுகளிலும் விழுந்திருக்கும் ., அதற்கெல்லாம் , இந்த அப்பாவின் இயக்கத்தில் அந்த பிள்ளை தற்போது நடித்து வரும் ‘அந்தகன்’ நிச்சயம் பதில் சொல்லும் என்று நம்புவோம் !!!
😀😀😀😀😎😀😀😀😀