நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
இலவசமா ‘சினிமா டிக்கெட்டு’கள் வழங்க நாங்க ரெடி ! தியேட்டரிலும் OTT யிலும் படம் பார்க்க நீங்க ரெடியா ..? எனக் கேட்டு இலவச டிக்கெட்டுகள் வழங்க முன்வந்துள்ள ‘theaterhoods.com’ ஒடிடி தளம் !!
OTT தளங்கள் அறிமுகமான புத்தில் ., இவை வாடிக்கையாளர்களை வசீகரிக்குமா.?! என்கிற சந்தேகங்கள் இருந்தது என்னவோ உண்மை தான் ! ஆனால், அதைத்தொடர்ந்து.வந்த கொரோனா எனும கொடூரன் ., OTT தளங்களை மக்கள் மத்தியில் அழுத்தமாகவே பதிய வைத்துவிட்டான் என்றால் மிகையல்ல !
அந்த வகையில திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்துமே மூடப்பட்டு பொது முடக்கத்தில் மக்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் முடங்கிப்போய் விடாமல் காத்த கபசுர குடிநீர போல் ., OTT தளங்களும், புத்தம்புது சினிமாக்களை நம் இல்லங்களுக்கே எடுத்து வந்து, Work From Home எனும் பெயரில் வீட்டில் முடங்கி கிடந்த மனிதர்களின் மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் அளவில்லாத படைப்புகளை வழங்கி புத்துணர்ச்சி தந்ததை யாரும் அவ்வளவு எளிதில். மறந்திருக்க மறுக்க முடியாது.
அந்த வகையில், OTT தளங்களின் வரவு தற்போது வரை நல்வரவாகிப்போனது என்றே சொல்லவேண்டும். இந்த நல்ல வேளையில் தமிழர் திருநாளான பொங்கல் திரு நாளை முன்னிட்டு ஜனவரி 15 முதல் தித்திக்கும் சர்க்கரை பொங்கல் போல திகட்ட திகட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் வருகிறது theaterhoods.com OTT.
இது குறித்து நம்மிடையே பேசிய அதன் இந்திய மண்டல மார்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன், ” ஒரு இந்தியனாக உலகளவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் இந்திய படைப்புகளை நினைத்து பெருமைப்படுகிறேன்.அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.
மேலும்., அவர் கூறுகையில்… “இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். திரைப்படங்கள்… அது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் அப்படிப்பட்ட திரைப்படங்களை ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்,” என்றார்.
“உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் வழங்கவுள்ளோம். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம். எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தியேட்டர்ஹூட்ஸின் நோக்கம் குறித்து விவரித்த அவர், “இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகின்றன. ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது தவிர, சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்,” என்றார்.
புத்தம் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான theaterhoods.com, சிறந்த திரைப்படங்கள் மற்றும் சுவாரசியமான வலை தொடர்களை மொபைல் மற்றும் இணையதளம் சார்ந்த உங்கள் சொந்தத் திரைகளுக்கு கொண்டு வரும். அளவற்ற பொழுதுபோக்கு சேவைகளை இது வழங்கும்.
அதுமட்டுமில்லாமல், திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு ரசிப்பதற்கான டிக்கெட்டுகளை இலவசமாகவும் வழங்கி, பொழுதுபோக்கிற்கான புகலிடமாக அமைய உள்ளது theaterhoods.com.
கடந்த 15 ஜனவரி 2022 அன்று பொங்கல் தின விருந்தாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது செயல்பாடுகளை தொடங்கி உள்ள இந்த தளம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் திரையரங்கு மற்றும் ஒடிடி அனுபவத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது.
சந்தாதாரர்களுக்கு அளவற்ற பொழுதுபோக்கை வழங்கும் அதே வேளையில், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த செலவில்லாத தீர்வையும் இது வழங்குகிறது. மேலும், பிவிஆர் போன்ற முன்னணி திரையரங்க குழுமங்களுடன் இந்த தளம் கைகோர்த்துள்ளது.
ஆகையால், சந்தாதாரர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பும் ஓடிடி தளமாக theaterhoods.com விளங்கும். திரைப்படங்கள், இணையத் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை போன்ற உள்ளடக்கங்கள் இந்த தளத்தில் கிடைக்கும்.
இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மூலம் உலகம் முழுவதும் தியேட்டர்ஹூட்ஸின் சேவை கிடைக்கும்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் தங்கள் தயாரிப்புகளை செலவில்லாத விளம்பரத்திக்கு (புரமோஷனுக்கு) content@theaterhoods.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ட்ரைலர் மற்றும் தயாரிப்பு விவரங்களுடன் எங்களை அணுகலாம். என்று முடித்துக்கொண்டார்.
தியேட்டர்ஹுட்ஸ் , 5000 க்கும் மேற்பட்ட இந்திய படைப்புகள் 1000 க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தயாரிப்புகள் மற்றும் பல்வேறு கதைக்களங்களுடனான தொடர்கள் ஆகியவற்றை இத்தளத்தில் வழங்கவுள்ளது., அத்துடன் புதுப்படங்களுக்கு இலவச சினிமா டிக்கெட்டுகள் , திரைப்படங்களின் விளம்பரங்களை இலவசமாக OTT தளத்தில் வழஙகும் திட்டத்தில் உள்ளது…இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது…. இந்த 3வது கொரோனா அலைக்கு இந்தியாவில் லாக் டவுன் போட்டால்., மற்ற முன்னணி ஓடிடி தளங்களை எல்லாம் பின்னுக்கு தன்ளி விட்டு ., இந்த theaterhoods.com , OTT தளங்களில் ‘நம்பர் ‘ஒன் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை …” என வாய்பிளக்கின்றனர் விவரமறிந்தோர் ! அதையும் பார்க்கத்தானே போகிறோம் !!
😀😀😀😀😎😀😀😀😀