நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

139

சென்னையில களை கட்டிய ‘தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்’ – ‘ டிராபி லான்ச் !! ‘

தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ராபி லான்ச் – ஈவென்ட் ., கடந்த பிப்ரவரி 15 புதன்கிழமை அன்று லீ மாஜிக் லேன்ட்டன் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது.

அதில் திரைத்துறையை சேர்ந்த ஜாம்பவான்கள் ஒளிப்பதிவாளர் – P.C.ஸ்ரீராம், இசையமைப்பாளர்- வித்யா சாகர், படத்தொகுப்பாளர் – B.லெனின், இயக்குனர் – V.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமாவைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், ஒரு சில திரைத்துறையினருக்கும் & மாணவர்களுக்கும் மட்டுமே எளிதில் தெரிவதாகவும், அதிகம் அறியப்படுவதாகவும் இருக்கிறது.அதைமாற்றி சினிமாவை விரும்பும் கடை கோடி மாணவர்களுக்கும், சினிமா விரும்பிகளுக்கும், கனவுகளோடு பயணிக்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள், மற்றும் ஏனைய திரைத்துறையினர்களுக்கும் எளிதில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த ‘தி கார்னர் சீட்ஸ் ‘ சர்வதேச திரைப்பட விழா உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 153 நாடுகளில் இருந்து படைப்புகள் சமர்ப்பிக்க படுகிறது. கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் தேடிச்சென்று அவர்களை இதில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் Prof. Dhanapalan , College of Science and Management, Chennai மற்றும் AVS College of Arts And Science, Salem உதவியோடு அணைத்து கல்லூரியையும் பங்கேற்க வைக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

திரைப்படம், ஆவணப்படம், திரைக்கதை தொகுப்பு, மொபைல் திரைப்படங்கள், குறும்படங்கள் என்று மொத்தம் 41 பிரிவுகளில் உங்கள் படைப்புகளை Filmfreeway மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 4 .

திரைப்பட திரையிடல் மற்றும் விருது விழா ஏப்ரல் 20 ம் தேதியில் நடைபெற இருக்கிறது.

அதன் தொடக்கமாக.,
‘தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ராபி லான்ச் – ஈவென்ட் ‘ ., லீ மாஜிக் லேன்ட்டன் திரையரங்கில் வெகு விமர்சையாக நடந்ததற்கு கலைமாமணி நெல்லை சுந்தராஜன் அவர்களுக்கும் Vee Entertainment விஜி ஆன்டனிக்கும் ‘தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் குழுவினர் பெரும் நன்றி தெரிவித்ததுடன். இந்திய திரைப்படங்கள் உலக திரைப்பட விருதுகளை நோக்கி படையெடுப்பதைப்போல், உலக திரைப்படங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க வைப்பதை கௌரவமாக கருதவைப்பதே …. தங்கள் நோக்கம் …. என்று அதன் நிறுவனர்கள் சபரிநாதன் முத்துபாண்டியன் , MM தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கூறுகின்றனர். ‘நிச்சயம் அந்த, அவர்களது நோக்கம் நிறைவேற வெகு காலம் இல்லை …’ என்றே நமக்கும் தோன்றுகிறது.

‘தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்’ -தமிழகத்தில் புதிய சர்வதேச திரைப்பட விழா !!

தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ராபி லான்ச் . ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராமால் அறிமுகம் செய்யப்பட்டது அப்போது , படத்தொகுப்பாளர் B.லெனின், இசையமைப்பாளர் – வித்யாசாகர், ஜூரி – கலைமாமணி நெல்லை சுந்தரராஜன் , இயக்குனர் V. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள ‘தி கார்னர் சீட்ஸ் ‘ன் நிறுவனர்கள் சபரிநாதன் முத்துபாண்டியன், MM தனா, ராஜேஷ் கண்ணா, ராகுல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதெல்லாம் ok.. ஆனால் , இவ்விழாவில், அதாவது ., தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ராபி லான்ச் . விழாவில்., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மேற்படி , விஐபிகள் அனைவரும் ‘ சென்டர் சீட்ஸ்’ பர்ஸ்னாலட்டிகள் ஆச்சே ! என விழாவிற்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் கிசுகிசுத்தது ஹைலைட் !

😇😂🤪😄😎😄🤪😂😇