நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

87

” ‘நடிகன் ‘ என நீருபித்த சத்யராஜ் ! “

“ ‘தீர்க்கதரிசி’ திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ் !!”

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், இரட்டை இயக்குனர்கள் PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை , ஊடக நண்பர்கள் முன்னிலையில் சமீபமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் …
இப்படக்குழுவில் இடம்பெற்றுள்ள பலரும்
‘தீர்க்கதரிசி’ படம் பற்றி பேசினர்.

இப்படத்தில் நடித்துள்ள
நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது..
“இப்பட விழாவிற்காக பல ஊர்களில் இருந்து வந்த எனது அன்பான சகோதரர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சதீஷ்குமார் எனது கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். இதற்கு முன் நான் நடித்த படத்தில் ஒரு சிக்கல் வந்த போது, அதற்கும் உதவ முன் வந்தவர் சதீஷ் சார் தான். அவர் தான் இந்தப்படத்தின் அற்புதமான இயக்குநர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ஒரு அற்புதமான கதையை எனக்கு கொடுத்து, அதில் நான் சரியாக பொருந்தி போவேன் என்றும் கூறினார். அவருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக அனைவரையும் ரசிக்க வைக்கும்.”

நடிகர் அஜ்மல் பேசியதாவது..,

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்யந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் …. என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

இப்பட இரட்டை
இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,

“இது எங்களது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப்பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இப்பட இரட்டை
இயக்குநர்களில் மற்றொருவரான LR சுந்தரபாண்டி பேசியதாவது..,

“பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்க காரணம், இயக்குநர் ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கன்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கன்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி என்று பேசிட விழா இனிதே நிறைவுற்றது .

முன்னதாக ‘ தீர்க்கதரிசி’ படம் குறித்து இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி , ஆர்.வி.உதயகுமார் , பேரரசு , நடிகர்கள் நாசர் , ராம்குமார் சிவாஜி … உள்ளிட்டோரும் சிலேகித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

‘ தீர்க்கதரிசி’ திரைப்பட இசை டிரைய்லர் வெளியீட்டு விழா நடந்த
அதே நாளில் அவ்விழா நடந்த பிரசாத் லேப் திரையரங்கம் அருகே அதே சென்னை , சாலிகிராமம் ஏரியாவில் உள்ள நடிகர் மயில்சாமி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அமரர் மயில்சாமி யின் பிரேதத்தை பார்த்து மற்றவர்களை காட்டிலும் அதிகம் கதறி அழுத ‘புரட்சி தமிழன்’ சத்யராஜ் ., அந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்ட கையோடு ‘தீர்க்கதரிசி’ விழாவிற்கு குளிக்காமல் கொள்ளாமல் … வந்து சேர்ந்து இங்கு விழாவில் பேசியபோது மயில்சாமி மரணம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாது சிரிக்க சிரிக்க தேவை இல்லாத பழங்கதையை எல்லாம் குறிப்பிட்டு குழுமிருந்தோரை வயிறு வலிக்க சிரிப்பு மூட்டியது விழாவிற்கு வந்திருந்த சினிமா & மீடியாக்காரர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியதாமே ? அது,
நெசந்தானா .?!

😂🤪😄😇😎😇😄🤪😂