நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

136

‘தல’ அஜீத் மாதிரி , சால்ட் &பெப்பர் லுக்கில் விஜய் ஆண்டனி !

ஜோடியாக மீனாட்சி சவுத்ரி !!

‘கொலை’ செம ரகளை ன்னு சொல்லுங்கோ !!!

‘விடியும் முன்’ எனும் மர்டர் மிஸ்டரி படத்தை ஆங்கிலப் படத்துக்கு இணையாக சில வருடங்களுக்கு முன் உருவாக்கி கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க செய்திருந்த இயக்குனர் பாலாஜி கே.குமார்., இப்போது ‘கொலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து இந்த மாதம் 21ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளுக்கு வர இருக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், கமல் போரா, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாலாஜி கே. குமார்.

“சிறிய வயதில் இருந்தே மர்டர் மிஸ்டரி படங்கள் மேல் எனக்கு அதீதக் காதல் உண்டு. அப்படித்தான் இந்தக் கதையையும் எழுத ஆரம்பித்தேன். 1920 களில் ஒரு நடிகை கொலை செய்யப்பட, அந்த கொலை பற்றிய பின்னணி துப்பு துலங்காமல் கடைசி வரை சஸ்பென்ஸாகவே இருந்தது.

பல பெரிய எழுத்தாளர்களும் அந்தக் கொலை எப்படி நடந்து இருக்கும் ? என்பதை ஆராய்ந்து அறிந்து அவரவர் வழியில் நிறைய கதைகளை எழுதி இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு நான் அது பற்றிய ஒரு கதையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அப்படித்தான் இந்த கதையை எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 முறை இதற்கான கதையை மாற்றி மாற்றி எழுதினேன். தூங்கும் போது… சாப்பிடும் போது… என்று சதாசர்வ காலமும் இந்தக் கதையின் நினைவாகவே இருந்த போது சட்டென்று ஒரு ஐடியா உதிக்க அதை மும்முரமாக எழுதத் தொடங்கி, இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினேன்.

வழக்கமாக ஒரு கொலை, அதை துப்பறியும் போது நேரும் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள், கடைசியில் ஹீரோ, கொலை செய்தவனையும் அதற்கான காரணத்தையும் சரியாகக் கண்டுபிடிப்பது என்ற வரிசையில்தான் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.

கதையை எழுதி முடித்தவுடன் யாரிடம் சொல்லலாம் ? என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் ஒருவர் விஜய் ஆண்டனியைச் சந்தித்து இந்தக் கதையை சொல்லச் சொன்னார்.

வித்தியாசமான கதைகளையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றவே அவரிடம் கதை சொல்லச் சென்றேன். படம் இரண்டு மணி நேரம்தான் என்றாலும் இது பல லேயர்களைக் கொண்டது. ஒவ்வொன்றையும் சரியாகப் புரிய வைத்தால்தான் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவில் நான்கரை மணி நேரம் அவரிடம் கதை சொன்னேன்.

அவர் கேட்க ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே இந்தக் கதை பற்றிப் புரிந்து கொண்டதால் நான்கரை மணி நேரத்தில் கதையை முடிக்க முடிந்தது. கதையைக் கேட்டு திருப்தியான அவர்தான் இன்ஃபினிட்டி தயாரிப்பு நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிக்க சரியான நிறுவனம் என்று முடிவு எடுத்தார்.

அவர் சொன்னதைப் போலவே இன்ஃபினிட்டி ஃபிலிம் அட்வென்ச்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டார்கள். பத்து வருடங்களாக என்னை நம்பி என்னுடன் தொடர் பிலேயே இருக்கும் என்னுடைய தொழில்நுட்ப டீமை அப்படியே பயன்படுத்திக்கொள்ள நான் அவர்களிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லவில்லை அதேபோல் இந்த படத்துக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுத்தார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக மிகவும் இந்தப் படத்தை நேர்த்தியாகக் கொடுத்தால் மட்டுமே இந்தக் கதைக்கான முழு நியாயமும் கிடைக்கும் என்பதால் அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்..!” என்றவரிடம் “விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தில் சால்ட் பெப்பர் லுக் கொடுத்தது ஏன்..?” என்று கேட்டபோது,

படத்தில் அவர் டிடெக்டிவாக வருகிறார். அந்தத் துறையில் மிகுந்த அனுபவசாலியாக வரும் அவர் நாற்றபதுக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்தவர் என்கிற அளவில் அந்த சீனியாரிட்டியைக் காட்ட அப்படி ஒரு கெட்டப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அவர் ஏற்ற வேடங்களிலேயே இது மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கும்..!” என்றார் பாலாஜி.

விஜய் ஆண்டனியுடன் ‘கொலை’ படத்தில் மீனாட்சி செளத்ரி, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர் பிரதான வேடமேற்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லலிதா தனஞ்செயன், ஆர்.வி.எஸ்.அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தில் செல்வா ஆர்.கே படத்தொகுப்பை கவனிக்க, சுகுமார் நல்லகொண்டா ஒலி வடிவமைப்புப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் பிஸியாக தற்போது வளைய வரும்
மீனாட்சி சவுத்ரி தான் இந்தப்பட நாயகியா ? நாம் கேட்டது தான் தாமதம்

“இந்தப் படத்தில்தான் மீனாட்சி சவுத்ரியை முதலில் அறிமுகபடுத்தினோம். ஆனால் , இப்போது அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக பிஸியாகிவிட்டார்..!” என்ற உண்மையையும் போட்டு உடைத்தார் ‘கொலை’ தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்ஜெயன்.

மீனாட்சி சவுத்ரியை பற்றி இயக்குநர் பாலாஜி கே.குமார் , “நடை உடை என்று தொழில் ரீதியாக மாடலாக இருப்பவரால் மட்டுமே அந்தப் பாத்திரத்தில் ஜொலிக்க முடியும் என்பதால் நிறைய மாடல்களை வரவழைத்துப் பார்த்தோம். ஆனால் இந்தக் கேரக்டரின் படி அந்த முகம் நமக்கு அடுத்து வீட்டு பெண் போல் இருக்க வேண்டும் என்பதாலும் மீனாட்சி சவுத்ரி அதற்கு பொருத்தமாக இருந்ததால் அவரை கதாநாயகி ஆக்கினோம்..!” என்ற இயக்குனர் பாலாஜி, “ரித்திகா சிங்கும் ஒரு டிடெக்டிவாக வருகிறார். அவருக்கு வழிகாட்டும் அனுபவஸ்தராகதான் விஜய் ஆண்டனி கதைக்குள் வருகிறார். என்று மேலும் தொடர்ந்தார். ஆனால், நம்ம, மீடியாவுக்கு மீனாட்சி சவுத்ரி பற்றியும் ரித்திகா சிங் பற்றியும் தகவலே போதுமானதென்பதால் அங்கிருந்து வுடு ஜூட் என எஸ்கேப் ஆனோம். நிச்சயம் கொலை மேற்படி , இருவராலும் ரகளையாக இருக்கும் என்பது நம் நம்பிக்கை…. ஹீ….ஹீ…!

😎😃😄😜🤪😇🤪😜😃😄😎