நமக்கு கிடச்ச News…நம்ம கேட்ட Talks…

137

“‘சைத்தான்’, ‘எமன்’, ‘கொலைகாரன்’ , ‘கொலை’,… படங்களைத் தொடர்ந்து தற்பொழுது ‘ஹிட்லர்’ !

விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளி வர இருக்கும் பட டைட்டில் !!

‘செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரில்., T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, சமீபமாக சென்னை , சாலிகிராமம்- பிரசாத் லேப் பிரிவியூ திரையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் T.D.ராஜா பேசியதாவது..
இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு மிகக்கடினமாக உழைத்துள்ளனர். மியூசிக் டைரக்டர், ஸ்டண்ட் டைரக்டர் என ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். நடிகை ரியா சுமன் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குநர் தனா 24 மணி நேரமும் இந்தப்படத்தையே நினைத்துக் கொண்டிருப்பார். இரவு பகலாக படத்திற்காக உழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மனிதநேயம் மிக்க மாமனிதன் அவர். அவரது சொந்தப் படத்தை விட இந்தப் படத்தின் மீது அக்கறை கொண்டு என்னிடம் எப்போதும் விசாரித்துக் கொண்டிருப்பார். அவரது மனதிற்கு நன்றி. “ஹிட்லர்” மிகச் சிறந்த படைப்பாக நிச்சயம் இருக்கும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது…
இந்த படத்தில் நன்றி என ஆரம்பித்தால் 500 பேருக்கும் மேல் நன்றி சொல்ல வேண்டும். அத்தனை பேரின் பங்கும் இருக்கிறது. என்னை நம்பி தயாரித்த T.D. ராஜா , என் கதையில் நடிக்க வந்த விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் மிகச் சிறந்த நடிகர் பட்டாளம் எனக்குக் கிடைத்தார்கள். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. கௌதம் மேனன் , விஜய் ஆண்டனி என எல்லோருமே அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப்படம் முன்பே வந்திருக்க வேண்டியது. விஜய் ஆண்டனிக்கு நடந்த எதிர்பாராத ஆக்ஸிடெண்ட் படத்தைத் தாமதமாக்கியது. அந்த ஆக்ஸிடெண்ட் நடந்து அவர் எங்களுக்காக விரைவாக எழுந்து வந்தார். அவரது அர்ப்பணிப்பு வியப்பானது.  அவருக்கு என்றென்றும் நன்றி. இந்த இடத்தில் என் ஒளிப்பதிவாளர் நவீன்குமாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவரது உழைப்பு அபாரமானது. படத்தின் மியூசிக் விவேக்,மெர்வின். நாங்கள் மிக நட்பாக எல்லாவற்றையும் பேசிக்கொள்வோம். படத்திற்காக என்ன செய்யலாம் என என்னுடன் பேசிப் பேசி, எல்லாவற்றையும் செய்வார்கள். இசை மிக அற்புதமாக வந்துள்ளது. அவர்களுக்கு நன்றி. சங்கத்தமிழன், மணிரத்னம் சார் படத்திலிருந்தே தெரியும். அவருடன் மிக நட்பாகப் பழகுவேன். எனக்காக இறங்கி வேலை செய்வார் அவருக்கு நன்றி. ரியா சுமனுக்கு பதிலாக முதலில் வேறு ஒரு ஹீரோயின் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங்கிற்கு இரண்டு நாட்கள் முன்னால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்காக வந்தவர் தான் ரியா சுமன், மிகச்சிறந்த நடிகை. ரொம்பவும் புரபஷலானவர். நன்றாக நடித்துள்ளார். “ஹிட்லர்” எனது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட படம். இது ஒரு ஆக் ஷன் திரில்லர் படம். படத்தைப் பார்த்த போது எங்களுக்கு நிறைவாக இருந்தது அதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது..
இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் தயாரிப்பாளர் T.D. ராஜாவும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்று யோசித்த போது இருவரிடமும் ஒரு சேர மனதில் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக் – மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்கண்ட இவர்களும் கீழ்காணும் ‘ஹிட்லர்’ பட தொழில் நுட்ப கலைஞர்களும் தயாரிப்பாளர் T.D. ராஜா, இயக்குநர் தனா, நாயகர் விஜய் ஆண்டனி… மாதிரியே ‘ஹிட்லர்’படம் குறித்தும் அப்படத்தில் தாங்கள் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் சுவாரஸ்யமாக பேசியது குறிப்பிடத்தக்கது .

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான ‘மப்டி’ படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படி பல்வேறு சிறப்புகளுடன் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘ஹிட்லர்’.

‘சைத்தான்’, ‘எமன்’, ‘கொலை’, :கொலைகாரன்’… படங்களைத் தொடர்ந்து தற்பொழுது ‘ஹிட்லர்’ என்ன தான் ஆச்சு ? விஜய் ஆண்டனிக்கு ..? என இனி யாரும் கேட்காத மாதிரியான நேர்மறை பட டைட்டில்களிலும் , கதைக்களத்திலும் இனியாவது விஜய் ஆண்டனி நடிப்பது அவருக்கும் நமக்கும் நலம் பயக்கும் … என ஒரு பத்திரிகை நண்பர் கிசுகிசுத்தது விஜய் ஆண்டனி காதிலும் ‘மே பி’ விழுந்திருக்கலாம் ! பார்க்கலாம் பொறுத்திருந்து !!

🤪😇😄😜😎😃😎😜😄😇🤪