நமக்கு வந்த News :நாம கேட்ட Talks :
சஸ்பென்ஸ் & ஆக்ஷன் நிறைந்த கிராமத்து கதையில் நடிகர்’கழுகு’ கிருஷ்ணா !!
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா & பட பூஜை சில தினங்களுக்கு முன் சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது.
விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.
வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.
விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs, கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதய குமார். , எடிட்டர் வெற்றி கிருஷ்ணன்,
மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமென்றால் கிருஷ்ணாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் வரவிருக்கும் கிருஷ்ணா இந்த இரண்டாம் இனிங்ஸில் ஒரு வல்லிய வலம் வந்து ரவுண்டு கட்டி அடிக்க ., நாமும் வாழ்த்துகளை சொல்வோம் என பத்திரிகையாளர்கள் பலரும் பேசிக் கொண்டது நம் காதில் விழுந்தது. Wow. கிருஷ்ணாவுக்கு மீடியா மத்தியில் இத்தனை எதிர் பார்ப்பா.?!
😄🤣😝😍😃😇😃😍😝🤣😄