நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

560
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நடிகர்கள் சிவக்குமார் , சூர்யா , கார்த்தி… குடும்பம் ஒரு கோடி ரூபாய் நிதி !
நூறு கோடிக்கு முன்னும் பின்னும் சம்பளம் வாங்கும் உச்சமும் , மிச்ச சொச்ச முன்னணி நடிகர்களும் ‘நாமும் இவர்களால் கோடிகளில் கொடுக்கணுமே…’ என புலம்பாதிருந்தால் சரி !!

தமிழ்நாட்டில் கொரானோ 2வது அலை பேரிடரை சமாளிக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர், பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்… என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் அல்லவா .?!

அதற்கு, உடனடி ரெஸ்பான்ஸாகவும் ., மருத்துவத்திற்காக அல்லல் படும் மக்களின் அவல நிலையை பார்க்க பிடிக்காத நடிகர் சிவக்குமார் , அவரது மகன்களும் முன்னணி நடிகர்களுமான சூர்யா , கார்த்தி உள்ளிட்டோர் பெருந்தன்மையாகவும் உடனடியாகவும் எல்லோருக்கும் முன்னோடியாகவும் செயலில் இறங்க விரும்பி ., தங்களது உறவுக்காரரும் தமிழ் பட அதிபருமான ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியனையும் உடன் அனழத்துக்கொண்டு . இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது குடும்பம் சார்பாக 1 கோடி ரூபாயை நிதியாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள் !

தமிழ் சினிமா பிரபலங்களில் சிவகுமார் குடும்பத்தினர் முதன் முதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்துள்ளதைப்பார்த்து அவர்களைப் போலவே மேலும் , பல தமிழ் சினிமா முன்னணி நடிகர் , நடிகைகள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் … என இன்னும் பலரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து இந்த கொரானோ பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காக்க உதவி புரியவேண்டும் எனும் நல்ல நோக்கம் தான் இத்தகவலை., நடிகர் சிவக்குமார் ஃபேமிலியும் , முதல்வர் அலுவலகமும் உடனடியாக மீடியாக்களில் வெளிச்சம் போட்டுக்காட்ட காரணம்.

சிவக்குமார் குடும்பத்தின் இந்த உடனடி ஒரு கோடி முதல்வர் நிவாரண நிதி உதவியைப்பார்த்து., சூர்யா , கார்த்தியைவிட பல மடங்கு உயர்வாக .,ஒரு படத்திற்கு 120 கோடியாகவும் , 100 கோடியாகவும், 80 கோடியாகவும் சம்பளம் வாங்கும் நம் உச்சம் மற்றும் மிச்ச சொச்ச முன்னணி நடிகர்கள் ….
முன்னோடிகளாக திகழ்கிறார்களோ , இல்லையோ .?! இவர்கள் கொடுக்கலாம்…. இவங்க வூட்டுல மூன்று , நான்கு நட்சத்திரங்கள் சம்பாதிக்கிறாங்க.
நாங்க , அப்படியா .?! இப்பதானே எடப்பாடி முதல்வரா இருந்தப்போ., சில லகரங்களை ( உடம்பை அலட்டிக்கொள்ளாது வாங்குற சம்பளமோ பல கோடிகள்…) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொரோனா முதல் அலைக்கு கொடுத்தோம். அதற்குள் ‘இரண்டாவது அலை வந்துடுச்சு … ‘ன்னு ‘இன்னொரு முறை கேட்டா?’ எப்படி என ., நிதி உதவி கேட்ட , புதிய முதல்வர் ஸ்டாலினையும் , முதலாவதாக போய் முழுமனதுடன் ஒரு கோடி கொடுத்த சிவக்குமார் ஃபேமிலியையும் நினைத்து , இதற்கப்புறம் ‘நாமும் இவர்களால் கோடிகளில் கொடுக்கணுமே…’ என புலம்பாதிருந்தால் சரி !

😜😀😀😳😇😳😃😃🤪