நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

650

முதல்வர் நிவாரணநிதிக்கு ரூ.2 கோடி வழங்கிய ‘லைகா., ‘பெப்சி’ தொழிலாளிகளுக்கு தனியாக., ரூ.1 கோடி நிதி வாரி வழங்கியுள்ளது !!

 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில், அதன் நிறுவனர் சுபாஸ்கரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கிய நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு தனியாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் சார்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு (பெப்சி அமைப்பு ) ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் , இயக்குனர்- ஆர்.கே.செல்வமணியிடம், ‘லைகா’ முதன்மை செயல் அலுவலர் .ஜி.கே.எம்.தமிழ்குமரன் இன்று வழங்கினார்.

‘லைகா’ நிறுவனத்தின் இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன், பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், ‘இசைஞர்’தினா, ஜெ.ஸ்ரீதர், அசோக் மேத்தா, எஸ்.செந்தில்குமார், புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

நடிகர் ‘தல’ அஜீத் தவிர்த்து 2ம் கொரோனா அலையில் யாரும் பெரிசா பெப்சி தொழிலாளர் அமைப்புக்கு நிதி வழங்காத நிலையில் ‘லைகா’ பெருசா ஒரு கோடி கொடுத்திருப்பது பாராட்டிற்கு உரியது. அதை வைத்து இதுவரை பெப்சி அமைப்பில் நிதி பெறாத மீதமுள்ள தொழிலாளிகளுக்கு தலா 1500/- உடனடியாக போடப்படும் என ஆர்.கே.செல்வமணி அறிவித்திருப்பது அதைவிட பெரும் பாரட்டிற்குரியது என இன்னமும் பணம் பெறாத பெப்சி தொழிலாளர் அமைப்பினர்., ‘லைகா’ & ‘பெப்சி’ இருசாராரையும் பாராட்டி வருகின்றனர்… என்பதுதான் ஹைலைட் !!
😳

 

😀😀😀😳😇😳😃😃😃

😳