நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய விஜய்க்கு ., அபராதம் விதித்த
நீதிமன்றம் !
கல்யாண மண்டபத்திற்கு வரி விலக்கு கேட்ட ரஜினிக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் .?!
இங்கிலாந்தில் இருந்து., தான், இறக்குமதி செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்., ” சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது .” என கண்டனமும் தெரிவித்துள்ளது !
மேலும் , நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது ! என்றும் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது .
வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் காட்டமாக கூறியிருப்பதுடன் தனது இறக்குமதி சொகுசு காருக்கு இங்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதனால் அந்த சொகுசு காருக்கு உரிய வரியுடன் அந்த ஒரு லட்சம் அபராதத்தையும் நடிகர் விஜய் சேர்த்துக்கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
” கல்யாண மண்டபத்திற்கு கொரோனா காலத்தில் வரி விலக்கு கேட்ட ரஜினிக்கும், இவருக்கும் என்ன வித்தியாசம் .?! அவராவது அரசியலும் வேண்டாம் , மக்கள் மன்றமும் வேண்டாம் என உடல்நிலையை காரணம் காட்டி நேற்றோடு முற்றிலும் ஒதுங்கிக்கொண்டார். அரசியலுக்கு முழுக்கும் போட்டுவிட்டார்.
ஆனால் , நாடு, நாட்டு மக்கள்… என ரஜினியைத் தாண்டி வாய் கிழிய வசனம் பேசும் விஜய் .?! எப்போ அரசியலில் குதிப்பார் ? என இன்னமும் பெரும் இளைஞர் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில , விஜய் , தனது இறக்குமதி காருக்காக, நம்ம நாட்டுக்கு சேரவேண்டிய வரிய கூட கட்டமாட்டேன் எனக்கூறி வக்கில வச்சி கோர்ட்டுல வழக்கு போட்டு அதை கோர்ட் கண்டித்து ஒரு லட்சம் அபராதமும் போட்டிருக்கு … இவர் எல்லாம் அரசியல்ல குதிச்சு தலைவராகி, மக்களுக்கு நல்லது செஞ்சி…. அப்பப்பா கலிகாலம் என்பது இதுதானோ ..? ” என நம் காதுபட நொந்தபடியே சென்றனர் இளம் தளபதியால் சமீபமாக பழிதீர்க்கப்பட்ட பழைய வேலையாட்கள் சிலர். அடக்கொடுமையே !
😳😀😀😀😳😀😀😀😳